பள்ளிமாணவி பாலியல் வன்கொடுமை..!! நாதக செயலாளர் உட்பட 7 பேர் கைது..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த மாதம் ஜூலை 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை தேசிய மாணவர் படையின் (என்.சி.சி) பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் 17 மாணவிகள் கிருஷ்ணகிரி கலையரங்கில் தங்கி NCC சேவையில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில் கடந்த ஜூலை 9ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கலையரங்கிற்கு வந்த 12 வயது சிறுமியை தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் (வயது 32) சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியின் ஆசிரியர், மற்றும் முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து பள்ளியின் முதல்வர் சதீஸ்குமார்., இதை பற்றி யாரிடமும் சொல்லிக்கொள்ள வேண்டாம் தெரிந்தால் பெற்றோர்கள் வருத்தப்படுவார்கள் என அந்த மாணவியிடம் கூறியுள்ளார்..
அதேசமயம் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி பள்ளி மாணவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். பின் சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்., அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்..
அதனையடுத்து பெற்றோர் சிறுமியிடம் இது குறித்து கேட்ட போது தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தெரிவித்துள்ளார். அதனையடுத்து மாணவியின் தாயார் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்., புகாரின் பேரில் என்.சி.சி சேலம் சரக டி.ஐ.ஜி. உமா மற்றும் கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் நேரில் நேரில் சென்று விசாரணை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் சதீஸ் குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிஃபர், தாளாளர் சாந்தன் என்.சி.சி. மாஸ்டர் சக்திவேல், இந்து, சத்யா, சுப்பிரமணி ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக உள்ள சிவராமன், மற்றும் என்.சி.சி. பயிற்சியாளர் சுதாகர் ஆகிய இருவரையும் பிடிக்க 4 தனிப்படை போலீசார் கொண்ட குழு அவர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் சிவராமன் அக்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து வந்துள்ளார்..
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இந்த வழக்கில் சிவராமன் சிக்கிய நிலையில் அக்கட்சியில் இருந்து உடனே அவர் நீக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள சிவராமன் பல்வேறு பள்ளி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.. என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு என்.சி.சி. பயிற்றுநராக உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீவிர தேடுதலுக்கு பின் கோவையில் பதுங்கி இருந்த சிவராமனை இன்று நள்ளிரவு தனிப்படை போலீசார் சிவராமனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..