கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் பிளஸ்-2 படித்து வந்த மாணவி தோழியை பார்த்து வருவதாக வீட்டில் கூறி சென்ற மாணவி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.மாயமான மாணவிக்கும், 32 வயதான ஆங்கில ஆசிரியர் ராஜன் ஆண்டனி போஸுக்கும் கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்து வந்துள்ளது.
சமீபத்தில் மாணவிக்கு 19-வது வயது பிறந்து விட்டதால் அவரது பிறந்தநாளை ஆசிரியருடன் சக மானவிகளும் கொண்டாடியுள்ளனர். அடுத்த நாள் அந்த மாணவி ஆசிரியருடன் ஓட்டம் பிடித்துள்ளார்.மாயமான மாணவி, ஆசிரியருடன் ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. அவர்களை நாகர்கோவில் அழைத்துவர போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன் பயனாக மாணவியும் ஆசிரியரும் நேற்று நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார்கள்.
Discussion about this post