இன்ஸ்ட்டா காதல் மோகம்..!! 15 வயதிலேயே காதல் திருமணமா..!! 2கே கிட்ஸ் அட்டூழியம்..!!
வாணியம்பாடி அருகே 15 வயது சிறுமிக்கு இளைஞர் தாலி கட்டிய வீடியோ வைரல்சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார்.
18 வயது ஆன பின் தான் நம் மாநிலத்தில் ஓட்டுரிமை., வாகன உரிமம் பெற முடியும்.., 21 வயது ஆன பின் தான் பெண்களுக்கு திருமண செய்துகொள்வதற்கான வயது என அரசு சட்டங்கள் வைத்திருந்தாலும்.., அந்த சட்டத்தை மதிக்குற பழக்கம் எல்லாம் எங்களுக்கு கிடையாது.. நாங்க ஸ்கூல் போறதே லவ் பண்ணத்தான் கல்யாணாம் பண்ணத்தான் என சொல்லுகிறார்கள் ஒரு சில 2கே கிட்ஸ்கள்..
அப்படி படிக்கின்ற வயதில் படிக்காமல் அனாவசிய செயலில் ஈடுபட்ட 2கே கிட்ஸ்கள் திருமணத்தை விவரிக்கிறது நம் “களத்தில் மதிமுகம்”.. செய்திகள்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் கிராமத்தை சேர்ந்த 15வயது சிறுமி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால்.., வீட்டிலேயே இருந்துள்ளார்.. அப்போது இந்த சிறுமிக்கு இன்ஸ்ட்டாகிராம் மூலம் பாலாஜி என்ற 22 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.. பின் சிறுமிக்கு திருமண ஆசை காட்டிய பாலாஜி.. அந்த சிறுமியை அழைத்து சென்று ஒரு கோவிலில் வைத்து தாலிகட்டியுள்ளார். அதை வீடியோவாகவும் இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி., நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வாராததால் சிறுமியின் தாய் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அந்த சிறுமியை இளைஞர் அழைத்து சென்று ஒரு கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதை வைத்து போலிசார் அந்த சிறுமியை மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியை அழைத்துச் சென்று தாலி கட்டிய இளைஞர் பாலாஜி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளைஞரை போலிசார் தேடி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..