பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளில் பிச்சை எடுக்கும் விவகாரம் மிகுந்த கவலை தருவதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.
சியால்கோட்டில் உள்ள பாகிஸ்தான் ரெடிமேட் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர், சவுதி அரேபியா மட்டும் 4,700 பாகிஸ்தானிய பிச்சைக்காரர்களை நாடு கடத்தியுள்ளது-
பாகிஸ்தானில் சுமார் 2 கோடியே 20 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளனர். இவர்கள், ஆண்டுதோறும் சுமார் 42 பில்லியன் ரூபாய் சம்பாதிக்கின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரிப்பது சர்வதேச அளவில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. எனவே, பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். 2035ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் முன்னேற வேண்டும்.
சவுதி அரேபியாவின் தனிநபர்கள் பிச்சை எடுப்பதையும், குழுவாக பிச்சை எடுப்பதை தடுக்க கடுமையான சட்டம் அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ், நிதி அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும். பிச்சை எடுக்கும் செயலில் ஈடுபட்ட வெளிநாட்டினர் தண்டனை முடிவடைந்தவுடன் நாடு கடத்தப்படுவார்கள் .
பாகிஸ்தானில் தெற்கு பஞ்சாப், கராச்சி, சிந்து மாகாணங்களில் இருந்துதான் அதிக பிச்சைக்காரர்கள் வளைகுடா நாடுகளுக்கு செல்லகின்றனர். ஒரு முறை இவர்கள் நாடு கடத்தப்பட்டதும், குடியுரிமை அதிதிகாரிகள் இவர்களின் பாஸ்போர்ட்டை முடக்கி விடுவார்கள் . அதற்கு பிறகு, இவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியே செல்ல முடியாது.,
தங்கள் நாட்டுக்கு பிச்சைக்காரர்களை அனுப்புவரை தடுக்க வேண்டுமென்றும் சவுதி அரேபியா பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.