ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள் மற்றும் புடவைகள் வழங்கப்பட்டது….
மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம்” என்ற கருப்பொருள் பதாகையை வெளியிட்டு தேர்தல் பரப்புரையை தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணி குறித்து சிலர் விஷமத்தனமான பிரசாரங்களை பரப்பு வருவதாக தெரிவித்தார்
அதேபோல், சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
போயஸ் கார்டன் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா படத்துக்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள் மற்றும் புடவைகள் வழங்கப்பட்டது. வளர்மதி தலைமையில் ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
