இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்…
ஆம்பூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கடாம்பூர் தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வரும் பெண்ணிடம், மருத்துவர் நிவேதன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அதனால் அந்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதை தொடர்ந்து, அவரது பெற்றோர் உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மேலும், இது குறித்து காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மருத்துவர் நிவேதனை தேடி வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.