நடிகர் சந்தானத்தின் புதிய படத்தின் டைட்டில் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சந்தானம், தற்போது கதாநாயகனாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் ‘மண்ணவன் வந்தானடி‘, ‘சர்வர் சுந்தரம்‘ ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.
இந்நிலையில், சந்தானம் அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய எம்.ரத்னகுமார் இயக்கும் புதிய படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘குலுகுலு’ என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தை ராஜ் நாராயணன் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு அத்துடன் படத்தின் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.