விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தில் முக்கிய பிரபலம் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், சமீபத்தில் வெளியான டீசர் படத்திற்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விக்ரமுக்குப் பிறகு லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் படம், எல்.சி.யு-வின் பாகமாக உருவாகும் படம் என்பதால் வேறு யாரெல்லாம் இந்த படத்தில் இணைய உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக அதிகார பூர்வ தகவல் வெளியானது. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், கெளதம் மேனன், ஆக்சன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான், உள்ளிட்ட பலர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ஆயுதபூஜை விருந்தாக அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது சஞ்சய் தத் இந்த படத்தின்படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
லியோ படத்தில் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது வெளியாகியுள்ள இவரின் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் விஜய் ரசிகர்கள் வேற லெவலுக்கு எதிர்பார்த்து காத்துள்ளனர்.
வீடியோ இதோ…
Roll out the red carpet 🥳@duttsanjay sir has arrived in style to set the screen on fire 🔥
Exclusive video venum nu keteengalame, engaluku keturchu 💣#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss#LEO 🔥 pic.twitter.com/A0Ea1dqZVj
— Seven Screen Studio (@7screenstudio) March 11, 2023
Discussion about this post