“சாந்து பொட்டு.. ஒரு சந்தன பொட்டு..” தேவர்மகன் படம் உருவான கதை..!!
தீபாவளி அன்று புது படங்கள் ரிலீஸ் செய்வது இப்போது மட்டுமல்ல பல ஆண்டுகளாகவே நடந்துக்கொண்டிருக்கிறது என சொல்லலாம்..
இப்போ எல்லாம் ஒரு புதுப்படம் ரிலீஸ் ஆனால் அதை சில மாதங்களுக்குள்ளேயே தொலைக்காட்சியில் போட்டு விடுகிறார்கள்., ஆனால் 70ஸ் மற்றும் 80ஸ் காலக்கட்டத்தில் எல்லாம் ஒரு படமே தியேட்டரில் வெளியானால் அவை 100 நாட்களுக்கு மேல் ஓடும்..
அதுவும் பண்டிகை நாட்களில் ஒரே நாளில் 4,5 படங்கள் கூட ரிலீஸ் ஆகும்.. அப்படி 32 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் வெளியான தேவர்மகன் படத்தை பற்றி பார்க்கலாம்…
ஒரு சில படங்களை கதைக்காக பார்க்கும் ரசிகர்களை.. விட அதில் நடிக்கும் நடிகர்களுக்காக படம் பார்ப்பவர்கள் அதிகம் என சொல்லலாம்..
ஆனால் இப்படத்தில்., நடிகர்களுக்காக படம் பார்ப்பதா, கதைக்காக பார்ப்பதா அல்லது பாடல்களுக்காக பார்ப்பதா என இருக்கும்..
ஏனென்றால் இப்படத்தில், நடிகையர் திலகம் சிவாஜி கணேசன், உலக நாயகன் கமல ஹாசன், ரேவதி, கவுதமி, மற்றும் நாசர் என பலரும் நடித்திருப்பார்கள். ராஜ்கமல் பீலிம்ஸ் தயாரிப்பில், கமலஹாசன் எழுத்து இயக்கத்தில் கடந்த 1992ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி தீபாவளி அன்று வெளியானது..
கதை உருவான கதை :
வெளிவூரில் படிக்க செல்லும் கிராமத்து நாயகன் படிப்பை முடித்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வருகிறார்.., அப்போது தன்னுடைய சொந்த ஊரில் நடக்கும் பிரச்சனைகளை பார்த்து திரும்பி செல்ல நினைக்கும் நாயகன். மீண்டும் அப்பாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு., அங்கேயே தங்கி விடுவார். அதன் பின் தந்தை இடத்தில் இருந்து கிராம மக்களுக்கு சண்டையிடும் ஒரு கிராமத்து நாயகனின் கதையை படமாக எடுக்கப்பட்டுள்ளது..
படத்தில் சிறந்த வசனம் :
ஒரு படத்திற்கு நடிகர்கள் எப்படி முக்கியமோ அதை விட வசனங்கள் சிறந்ததாக இருக்க வேண்டும்.. அப்படி படத்தில் எத்தனை வசனங்கள் இருந்தாலும் ஒரு சில வசனங்கள் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்கும்..
சிவாஜி கணேசனுக்கும், கமல் இவர்கள் இருவரும் பேசும் இந்த வசனம் பட்டி தொட்டி எல்லாம் பேமஸ் என சொல்லலாம்..
சிவாஜி : “நீ செய்யி, எல்லாத்தையும் சரியா செய்யி.., இது என்ன பெருமையா..? கடமை ப்பா…
பாடல்கள் :
ஒரு படத்திற்கு இரண்டாம் அழகே அந்த படத்தில் வரும் பாடல்கள் என சொல்லலாம். எத்தனை பாடல்கள் இருந்தாலும் இந்த பாடல் மட்டுமே., திருமணத்திற்கு, திருமணம் ஆன பின்., DJ மியூசிக், கோவில் திருவிழா என எல்லாம் இடத்திலும் கேட்க தூண்டும்..
இளையராஜா இசையில், மனோ மற்றும் எஸ்.ஜானகி பாடிய பாடல்.,
“உன் கழுத்தில் மாலையிட…
எண்ணி ரெண்டு தோழ தொட..
என்னை தவம் செஞ்சேனோ என் மாமா..
இஞ்சி இடுப்பழகா., மஞ்ச செவப்பழகா, கள்ள சிரிப்பழகா என்ற பாடல் இப்போது கேட்டால் கூட ஒரு வைப் என சொல்லலாம்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..