தனியார் பள்ளியில் வாயு கசிவு..!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் திடீரென ஏற்பட்ட வாயுகசிவால் 35 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் கிராம தெருவில் உள்ள பெண்கள் தனியார் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் இப்பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது..
வாயுக்கசிவு ஏற்பட்ட நிலையில் மாணவிகளை உடனடியாக வெளியேற்றம் செய்யும் நிலையில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.. ஆனால் அதில் 3வது தளத்தில் இருந்த மாணவ, மாணவிகள் மட்டும் சீக்கிரம் வெளியேற முடியாமல் தவித்த நிலையில் 35 மாணவ மாணவிகள் மயங்கிய நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள் காலையில் இருந்து கெமிக்கல் வெளியேறியாதாக சொல்லப்படுகிறது.. அப்போதே நீங்கள் நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் 35 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டாம் என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்துடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்..
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.. அதில் பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் (Chemistry Lab) இருந்து வாயு கசிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது..
மேலும் இந்த சம்பவம் தற்செயலாக நடந்ததா இல்லை யாரேனும் சம்மந்தப்பட்டுள்ளார்களா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இந்த சம்பவம் திருவொற்றியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..