சுதந்திர தின விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறையின் பாராட்டு செயல்..!
சுதந்திர தின விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் இந்து சமய அறநிலையத்துறை கோயிலில் சமபந்தி விருந்து மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்து உணவு அருந்தினார்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பல்வேறு கோவில்களில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது. மயிலாடுதுறையில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பஞ்ச அரங்கதலங்களில் ஒன்றானதுமான பிரசித்தி பெற்ற திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தினை மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தொடக்கி வைத்து உணவு அருந்தினார்.
இதில் நகர மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சமபந்தி விருந்து உண்டனர்.
Discussion about this post