சுதந்திர தினம் அன்று இளைஞர்கள் செய்த தரமான செயல்..!! குவியும் பாராட்டுகள்..!
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏராளமான இளைஞர்கள் ரத்ததானம் அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூரில் தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத் சார்பில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெறுவது வழக்கம் அதன் படி இன்று 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது ஏராளமான இளைஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆர்வத்துடன் ரத்ததானம் வழங்கினர்.
இதில் பெறப்பட்ட ரத்தம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது இதன் மூலம் ரத்தம் தேவைப்படும் ஏழை எளிய நோயாளிகளுக்கு விலை இன்றி வழங்கப்படுகிறது. மேலும் பொது மக்களுக்கு ரத்தம் மாதிரிகள் கண்டறியப்பட்டு ரத்த அழுத்தம் உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்பட்டது ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..