கொல்லிமலையில் தொடங்கிய மலர் கண்காட்சி..!! திரண்ட சுற்றுலா பயணிகள்..!! அப்படி என்ன சிறப்பு இதில் உள்ளது..?
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி துவங்கியது இன்றும் நாளையும் 2 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கலைஞர் நூற்றாண்டு சின்னம் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்மாவட்டம், கொல்லி மலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா மற்றும் மலர் கண்காட்சி மேலும் சில நிகழ்வுகள் இன்று துவங்கியது.

சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி காலை தாவரவியல் பூங்கா, மலர் கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டார்.
கொல்லிமலை வல்வில் ஓரிவிழாவை தொடங்கி வைத்து சேந்த மங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி சிறப்பு உரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது தமிழக முதலமைச்சரின் சாதனைகளையும் மலை வாழ் மக்களுக்கு ஏற்ற சலுகைகளையும் திட்டங்களையும் எடுத்துக் கூறினார்.
அதை தொடர்ந்து சில கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது இதில் சாமி வேடம் அணிந்து வந்து நடனம் ஆடியவர்கள் மற்றும் கும்மிபாட்டு கோலாட்டம் நாடகங்கள் ஆகிய சமூக கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இருந்தது. கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவப்படுத்தினார்.
உயர் அதிகாரிகள் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர் அடுத்து படகு இல்லத்தை பார்வையிட்டார அடுத்து வல்வில் ஓரி கலையரங்கில் நடைபெற உள்ள கலைவிழா மற்றும் இதர விழாக்களை, சட்ட மன்ற உறுப்பினர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
அடுத்ததாக அமைச்சர் பொன்னுசாமி கண்காட்சிகளை திறந்து வைத்து, பல்வேறு துறைகளில் இருக்கும், சாதனை களை பற்றி விளக்கினார். மலர் கண்காட்சியில் குழந்தைகளை கவரும் வகையில் 40,000 ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சோட்டாபீம், 45,000 பல்வகை மலர்களால் ஆன மலர் படுக்கை மற்றும் மலர் அலங்காரம் ஆகியவை கண்ணாடி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது.
25 ஆயிரம் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கங்காரு முயல் மற்றும் 1500 பல வண்ண மலர்களால் ஆன இதயம், அமைதியான புத்தர் உருவம் மற்றும் அவரின் இயக்க அமைப்பு , ஹாக்கி சாம்பியன், கட்ட பொம்மன் வடிவம், கலைஞர் நூற்றாண்டு சின்னம் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இம்மலர் கண்காட்சியில் ரோஜா, ஜெர்பரா, கார்னேசன் ஆந்தூரியம் ஜிப்சோ பில்லம், சாமந்தி ஆர்கிட் லில்லியம் ஹெலி கோனியம் சொர்க பறவை கிளாடியோஸ் டெய்சி சம்பங்கி ஆகிய மலர்களால் இம்மலர் கண்காட்சி மிகவும் சிறப்பாக பொது மக்கள் கண்கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவபயிர்கள் குறித்து சுற்றுலாப்பயணிகள் மற்றும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மருத்துவ பெயரின் தாவரவியல் பெயர் பயன்படுத்தி பகுதி மருத்துவ பயன்கள் குறித்து விளக்க குறிப்பு வைத்து மருத்துவ பயன்கள் கண்காட்சி சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post