நாளை முதல் ரேஷன் கடையில் தக்காளி விற்பனை..!! அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு..!!
தக்காளி விலை தற்போது தங்கத்திற்கு நிகராக விலை உயர்ந்து வருகிறது.., அது குறித்து அமைச்சர் “பெரிய கருப்பன்” தக்காளி விலை உயர்வை குறைப்பதற்காக சென்னையில் ஒரு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மழை காரணமாக இந்தியா முழுவதும் தக்காளி விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளது. இந்த பாதிப்பால் இந்தியா முழுவதும் தாக்களி விலை உயர்ந்துள்ளது. இந்த விலை குறைப்பதற்கான நடவடிக்கைகள் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
நாளை முதல் சென்னையில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். விரைவில் மற்ற மாவட்டங்களிலும் இந்த செயல் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்..
நாளை முதல் ரேஷன் கடையில் விற்கப்படும் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும், சென்னையில் நாளை முதல் 82 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்.
அதற்கு முதற் கட்டமாக சென்னையில் முக்கிய 3 பகுதியில் உள்ள ரேஷன் கடையில் மட்டும் நாளை விற்பனை செய்யப்படும். பண்ணை பசுமைக் கடைகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பின் வட சென்னையில் 32 ரேஷன் கடைகளிலும், மத்திய சென்னையில் 25 ரேஷன் கடைகளிலும், தென் சென்னையில் 25 ரேஷன் கடைகளிலும், தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பேசினார்.
மேலும் தக்காளியின் விலை விரைவில் குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார் .
Discussion about this post