மதுகுடிக்க பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய 20 வயது இளைஞர்..!! அரியலூரில் பரபரப்பு..!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சாலையில் நின்று கொண்டவரிடம், தண்ணி அடிக்க பணம் கேட்டு. கத்தியை காட்டி மிரட்டிய ஜெயங்கொண்டத்தை சேர்ந்த முகம்மது யாசிக் என்ற இளைஞர் இன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், கும்பகோணம் சாலையில் உள்ள புறவழி சாலை மேம்பாலம் அருகே இலையூர் கிராமத்தைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பவர் அவரது நண்பர்களுடன் நின்று கொண்டு இருந்த பொழுது, அப்போது சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், வாகனத்தில் வந்து குடிப்பதற்கு பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.
இந்நிலையில் பணம் தர மறுத்த சூரிய பிரகாஷை தாக்கி அவரிடம் இருந்து 500 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளார். அது மது பிரிய இளைஞர்.
இந்நிலையில் சூரிய பிரகாஷ் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள், ஓடி வந்து அந்த இளைஞரை வளைத்து பிடித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர். விசாரணை மேற்கொண்டதில், ஜெயங்கொண்டம் ஜீ.எச் தெருவை சேர்ந்த முகமது யாசிக் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து குடிப்பதற்கு கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய முகமது யாசிகை. காவல் துறையினர் கைது செய்தது மட்டுமின்றி, அவரது வாகனத்தை பறிமுதல் செய்து. ஜெயங்கொண்டம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post