உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை ரஷ்ய அரசு முடங்கியுள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து 10வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவில் உக்ரைன் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளையதளங்களில் தங்கள் கருத்துக்களை மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதனால் ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளையதளங்களில் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்புக் கருத்துகள் எழுந்துள்ளதால் ரஷ்ய அரசு இந்த நடக்கையை எடுத்துள்ளது.