தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான அனைத்து பாடப் புத்தகங்களும் அனுப்பப்பட்டு வருகிறது. தட்டுப்பாடு என்ற பேச்சுக்கு இடமில்லை என திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் – பழனி சாலையில் உள்ள தமிழக பாடநூல் கிடங்கில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் பாடநூல் கழக தலைவர் லியோனி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்கள் போதிய அளவு கையிருப்பு உள்ளதா என அதிகாரியிடம் விவரம் கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் :
தமிழகத்தில் உள்ள ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் ஏப்ரல் மாதமே தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஏப்ரல் மாதமே அனைத்து புத்தகங்களும் தயாராகி விட்டன.
தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 296 பள்ளிகள் உள்ளது. இதில் 200 பள்ளிகளுக்கு மேல் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர். அரிசி கொம்பன் யானையை பிடிக்க மாவட்ட நிர்வாகம் வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதனை விரைந்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய்விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அது நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர் கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு போட்டிருந்தாலும் மற்ற பகுதியில் இருந்து யானை பார்ப்பதற்காக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் மக்கள் தொடர்ந்து படை எடுத்து வருகின்றனர். மேகமலையிலிருந்து வந்த அரிசி கொம்பன் யானை தற்பொழுது மீண்டும் மேகமலைப் பகுதியில் சென்று கொண்டிருக்கிறது. இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.என தெரிவித்தார்.
Discussion about this post