ஆறாம் வகுப்பு கணித பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ரம்மி குறித்தான பாடப்பகுதி அடுத்த கல்வி ஆண்டு முதல் அந்த பாடப்பகுதி நீக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆ லைன் ரம்மி தடை மசோதா குறித்தான விவாதங்களுக்கு மத்தியில் ஆறாம் வகுப்பு கணித பாடப்புத்தகத்தில் இருக்கும் ரம்மி குறித்தான பாடம் அடுத்த ஆண்டு நீக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. ரம்மி குறித்தான பாடப்பிரிவிற்கு பல தரப்பட்ட அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பலதரப்பட்ட கருத்துக்களையும் எதிர்ப்புகளையும் தொடர்ந்து அந்த பாட பிரிவை நீக்க பள்ளிக்கல்வி துறை முடிவெடுத்துள்ளது. அது குறித்த அறிவிப்பில் ஆறாம் வகுப்பு கணித புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ரம்மி பாடபகுதி நீக்கப்படும் மேலும் இந்த பாடப்பகுதி அடுத்த கல்வி ஆண்டு முதல் நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ள இந்த முடிவை சமூக ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.