வேளாண் & தோட்டக்கலை படிப்புகள் படித்த பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நேற்று(மார்ச்.18)காலை 10 மணியளவில் தொடங்குகியது. இதில், 2022-23 நிதியாண்டிற்கான ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை இன்று(மார்ச்.19) அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
அதில், பல்வேறு அறிவிப்புகளை அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வேளாண் சார்ந்த தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.
இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்களாக உருவாக்கும் வகையில், வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க பட்டதாரி ஒருவருக்கு ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படும், என தெரிவித்துள்ளார்.