பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டீஆர் நடித்து வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற RRR திரைப்படடின் நாட்டுநாட்டு பாடல் ஆஸ்கர் விருதுக்கான இறுதி பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை தொறந்து ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படம் இந்த ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிபெற்றது. சமீபத்தில் சீனாவிலும் வெளியாகி முத்து படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது. இந்த படத்தின் படக்குழு 95வது ஆண்டு ஆஸ்கர் விருதுக்காக பல பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறந்த ஒரிஜினல் ட்ராக் பிரிவில் இப்படத்தில் வரும் நாட்டுநாட்டு பாடல் 15 பாடல்கள் உள்ளடக்கிய இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
https://twitter.com/RRRMovie/status/1605780650233139202
இது குறித்து RRRபடக்குழு தனது ட்விட்டரில் பதிவேற்றியுள்ளது. அதில், #NaatuNaatu பாடல் முதல் இந்தியன் பாடலாக ஆஸ்கரின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. தங்களின் ஆதரவுக்கு நன்றி என்று பகிர்ந்துள்ளனர். இதற்குமுன் இந்திய சார்பில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த bgmக்காக இரண்டு ஆஸ்கரை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.