வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். ரெப்போ வட்டி என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ஆகும். பொதுவாக நாட்டில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ வட்டி உயர்த்தப்படுவது வழக்கம்.
கடந்த ஜூன் மாதம் 4.90 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உயர்த்தப்பட்டது.இந்நிலையில் ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் கடன்களுக்கு வட்டி விகிதமானது 5.40 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக உயர்ந்து 5.90%ஆக உயர்ந்துள்ளது.
வட்டி விகிதம் உயர்ந்தால் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை மேலும் உயர்த்த வாய்ப்புள்ளது. அதன் விளைவாக வீட்டுக் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் உயரக் கூடும் என கூறப்படுகிறது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நான்காவது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் கொரோனா காரணமாக உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.