வங்கதேசத்தில் பற்றி எரியும் கலவரம்..!! அரசியல் மாற்றம் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்..!!
வங்கதேசத்தில் சுதந்திர போரட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக மாணவர்கள் இடையில் ஏற்பட்ட பிரச்சனை கலவரமாக மாறியதில் பல பேர் காயமடைந்துள்ள நிலையில் 98பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறைக்கு காரணமான பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்ததை, தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா குடும்ப உறுப்பினர்களுடன் ஹெலிகாப்டர் மூலம் தப்பித்து டெல்லியில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இதனால், அந்நாட்டில் ராணுவ ஆட்சி அமல்படுத்தியுள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து வங்கதேசம் செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இந்த கலவரம் குறித்து விளக்கமளிக்க நாடாளுமன்ற அனைத்துக்கட்சிக் கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் நடைப்பெற்றது. இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டெல்லியில் தஞ்சம் அடைந்துள்ளது குறித்தும், அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள மாணவர்களின் கலவர போரட்டம் மற்றும் அரசியல் மாற்றம் குறித்தும் விளக்கம் அளித்தார்.
-பவானி கார்த்திக்