வனவிலங்குகளை வேட்டையாடும் நபர்கள்.. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி பகுதியில் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இரண்டு மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியுடன் இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான காவலர் மாந்தோப்பை சுற்றி வளைத்தனர் காவலர் வருவதை கண்டதும் கோட்டி என்பவர் தப்பி ஓடி விட்டாதை தொடர்ந்து தரணி என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல் துறையினர் தரணி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய கோட்டி என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தொடர்ந்து காப்பு காட்டு பகுதியில் வனவிலங்குகளை நாட்டுத் துப்பாக்கி வைத்து சில மர்ம நபர்கள் வேட்டையாடி வருவதாகவும் அதனை வனத்துறையினரும் காவல்துறையினரும் இணைந்து கண்டறிந்து தடுக்க வேண்டும் எனவும் குடியாத்தம் மற்றும் சைனகுண்டா போன்ற காப்புக்காட்டை ஒட்டி உள்ள கிராமங்களில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாகவும் அதனை கண்டறிந்து அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர்களை கைது செய்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்