தாராபுரத்தில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணி..!! விபரீதத்தில் முடிந்த விளையாட்டு..!!
தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற அரசு மாதிரி பள்ளி மாணவன் நீரில் மூழ்கி மாயம் 2 மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் தேடும் பணி தீவிரம்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச்சாலை பகுதியில் உள்ள அமராவதி ஆற்று பாலத்தின் கீழ் குண்டடம் மாதிரி பள்ளியில் படிக்கும் டேவிட், அசப் சாமுவேல், ஸ்டீவ் டேனியல், கலாப், டெவின் ரோஜர், நித்தீஸ் குமார், ஜெரோமியா ஆகிய 7, மாணவர்கள் நேற்று பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றுள்ளனர்.
அதன் பின் விடுமுறையை கொண்டாடுவதற்காக அமராவதி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் மாணவர்கள் கரைக்கு வரவில்லை.., அமராவதி ஆற்றில் குளிக்க சென்று 2 மணி நேரம் ஆகியும் கரைக்கு வராததால் அச்சமடைந்த சக நண்பர்கள் இதுகுறித்து அப்பகுதி கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்..
உடனே அங்கு நீச்சல் தெரிந்த சில நபர்கள் ஆற்றில் குதித்து ஜெரோமியாவை தேடியுள்ளனர் 1 மணி நேரம் தேடியும் மாணவன் கிடைக்காததால் அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறை மாற்றும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்துள்ளனர்..
தகவலின் பேரில் அங்கு வந்த தாராபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள் நீரில் மூழ்கி காணாமல் போன மாணவன் ஜெயரோமியோவை தற்போது தேடி வருகின்றனர். மீதமுள்ள 6,பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
காணாமல் போன ஜெரோமியோ என்ற மாணவன் ஆற்றினுள் சிக்கி கொண்டு இருக்கலாம் என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து காவல்துறையினர் தற்போது மீட்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.. இந்த சம்பவம் தாராபுரம் அமராவதி ஆற்றுப் பாலம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..