அன்னபூர்ணா உரிமையாளர் வெளியிட்ட அறிக்கை..!! மன்னிப்பு கேட்ட பாஜக..!!
கோவையில் நேற்று அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் ஜிஎஸ்டி குறித்து பேசிய வீடியோ மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.. இது பெரும் அவமதிப்பிற்கு உரியது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியாவில் நேற்று நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழிலதிபர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த கூடத்தில் பங்கேற்ற அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பேசியதாவது, “ஒரே பில்லில் (BILL) ஒரு ஜிஎஸ்டி போட்டுவிட்டு மற்றொரு பொருளை அதோடு சேர்க்க சொல்லும்போது அதற்கு ஒரு ஜிஎஸ்டி என 2 ஜிஎஸ்டி போடுவதால் வாடிக்கையாளர்களிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
ஒரு பன் (Bun) வாங்கினால் ஜிஎஸ்டி கிடையாது. அதவே அதற்கு வைத்து சாப்பிடும் க்ரீம் வாங்கினால் 18% ஜிஎஸ்டி வருகிறது. இதனால் கம்ப்யூட்டரும் சில சமயம் திணறுகிறது.” என சொல்லலாம்..
இதை கேட்பவர்களுக்கு “ஆஹா” என இருக்கும். அதுவே மக்களின் பார்வையில் இருந்து யோசிக்கும் போது கடுப்பாக இருக்கும்.. இதுபோன்ற பல உணவுப்பொருள்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கிறது., குறிப்பாக ஒவ்வொரு உணவு வகைக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதை அமைச்சர்களின் குழு விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளது.
பல மாதங்களுக்கு மேலாக ஹோட்டல் உரிமையாளர்கள்கள் ஜிஎஸ்டி பிரச்னை தொடர்பான கோரிக்கைகளை ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திலும் முன்வைத்துள்ளனர் பெரியவர் ஜனரஞ்சகமாக பேசியதால், ஜிஎஸ்டிக்கு பரம விரோதியாக இருப்பவர்களுக்கு கூட ஆதாயமாக தெரியும்.. என்னை பற்றி வரும் விமர்சனங்களைப் பற்றி நான் எதுவும் கவலைப்பட போவதில்லை.. அவர்களின் கோரிக்கை மறுபரிசீலனை செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்..
அது சர்ச்சையாக வெடித்தது., இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்., காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி., கரூர் நாடாளுமன்றம் எம்.பி ஜோதிமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்..
அதன் பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார்.. அத்தோடு அதனை வீடியோவாக எடுத்த சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டி நபரை கட்சியில் இருந்து நீக்கியதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..