இந்தி மொழி திணிப்பு..!! கர்நாடகாவில் தொடங்கிய போராட்டம்..!!
இந்தியாவிற்குள் இந்தி மொழி ஊடறுவி 75 வது ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது இந்தி தினத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட துக்க நாளாக அனுசரிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் இந்த இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக கன்னட மொழி பாதுகாப்பு இயக்கத்தினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்..
மத்திய அலுவலக மொழியாக இந்தி மொழியானது ஏற்றுகொள்ளப்பட்டு 75 வது ஆண்டுகள் நிறைவடைந்து நேற்று இந்தி தினம் கொண்டாடப்பட்டது. இந்தி தினத்தையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து டெல்லி பாரத் மண்டபத்தில் நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டார்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது “குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் அல்லது வங்காளம் என எந்த மொழியாக இருந்தாலும், ஒவ்வொரு மொழியும் இந்தியை வலுப்படுத்துகிறது எனவும் இந்திமொழிய நமது உள்ளூர் மொழிகளை வலுப்படுத்தும் விதமாக அலுவல் மொழித் துறையில் இந்தப் பணிக்கு நாம் ஆதரவளிப்போம் என்று இந்தி தினத்தை முன்னிட்டு, நாம் ஒரு உறுதிமொழி ஏற்பாட்டை மேற்கொள்வோம் என அமித்ஷா கூறியுள்ளார்..
இந்நிலையில் நேற்று இந்தி தினம் கொண்டாடப்பட்டதை வலியுறுத்தியும், இந்தி மொழித் திணிப்பைக் கண்டித்தும் கன்னடமொழி பாதுகாப்பு இயக்கத்தினர் தலைமையில் நேற்று கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்றது.
இன்றைய நாளானது இந்தி தினம் இல்லை இது கறுப்பு தினம் இந்தி மொழியைத் திணிக்கும் மத்திய பாஜக அரசின் முயற்சியால் கன்னட மொழி மிகவும் பாதிக்கும் எனவே மத்திய பாஜக அரசு இந்தி திணிப்பை கட்டாயமாக்க கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
மேலும் கர்நாடகாவில் இரு மொழிக் கொள்கை மட்டுமே அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. மற்றும் இந்தியில் வர்த்தக நிறுவனங்கள் எழுதி வைத்திருந்த பெயர் பலகைகளையும் எங்களது தாய் மொழியான கன்னட மொழியில் இருக்க வேண்டும்., என கூறி ஹிந்தி மொழியில் இருந்த பெயர் பலகைகளை அழித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..