“அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி வயநாட்டிற்கு நிவாரண உதவி..”
வயநாடு நிலச்சரிவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் வயநாடு மலைப் பகுதியில் உள்ள சூரல் மலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் வீடுகளின் மேல் விழுந்துள்ளது.., மேலும் ஊருக்குள் மழை வெள்ளம் புகுந்ததில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது. அந்த நிலச்சரிவில் பெண்கள், குழந்தைகள் உட்பட இதுவரை 280க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், இராணுவ வீரர்கள், மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல அமைப்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்வதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-லோகேஸ்வரி.வெ