பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு மற்றும் துணிவு படங்களின் விவாதம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாகியுள்ளது. எந்த படத்திற்கு அதிக தியேட்டர்கள் என்ற சண்டை ரசிகர்களை தாண்டி தயாரிப்பாளர் வரை சென்றுள்ள நிலையில் வாரிசு படத்தினை தமிழகத்தில் 4 இடங்களில் ரெட் ஜெயண்ட் நிறுவனமே வெளியிடவுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியது, அதில் விஜய் தான் நம்பர் 1 நடிகர் என்றும் அவருக்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கபட வேண்டும் என்றும் அவர் பேசினார் மேலும் அதிக தியேட்டர் ஒதுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலினிடம் முறையிட உள்ளோம் என்றும் பேசியது அஜித் ரசிகர்களிடம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில், வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள அதிகார்வபூர்வ அறிவிப்பில், சென்னை, செங்கல்பட்டு, கோவை, வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதிகளில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் அஜித்தின் துணிவு படத்தையும் விஜயின் வாரிசு படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுவது உறுதியாகியுள்ளது.