சென்னை ஐகோர்ட்டில் மாவட்ட நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை..!!
மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள 3 பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் கொலிஜியம் பரிந்துரையின்படி நடைபெற்று வருகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் குழு புதிய நீதிபதிகளைத் தேர்வு செய்வது, இடம் மாற்றம் செய்வது போன்ற பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பும்.
இந்த பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அதற்கான அறிவிப்பை வெளியிடும். கொலிஜியத்தின் பரிந்துரைகளை நிராகரிக்கும் உரிமை ஒன்றிய அரசுக்கு உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஐந்து பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகிய 5 பேரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஆர்.பூர்ணிமா, எம்.ஜோதிராமன், அகஸ்டீன் தேவதாஸ் மரியா க்ளாட் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது. இவர்களில் என்.ஜோதிராமன் தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..