புதிய கார் வாங்கிய வெங்கட் பிரபு.! காரின் விலை தெரியுமா..?
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வெளியான தி கோட் திரைப்படமானது கடந்த 5ம் தேதி வெளியாகி முதல் நாளே ரூ 126.32 கோடிகளை வசூல் செய்தது. இது இல்லாமல் படம் வெளியாகி 4 நாட்களில் 288 கோடி வசூல் செய்தது. இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனமே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இதனால் இயக்குநர், படக்குழுவினர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் புதிதாக கார் ஒன்று வாங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் புதிதாக ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார் என தகவல் வந்துள்ளது. இந்த காரை வெங்கட் பிரபு அவர்கள் தி கோட் படத்திற்காக வாங்கிய சம்பளத்தில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் புதிதாக வாங்கிய ரேஞ்ச் ரோவர் காரின் விலை 86 லட்சங்கள் என வெளியாகியுள்ளது.
சமீப காலமாக திரைக்கு வெளிவரும் படமானது நல்லா ஹிட் கொடுத்துவிட்டால் தயாரிப்பு நிறுவனமே இயக்குநருக்கு புதிதாக காரை பரிசளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் வெங்கட் பிரபு அவர்கள் தனது சொந்த பணத்தில் காரை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.