“பாரீஸ் ஒலிம்பிக் வெண்கல வில்வித்தை போட்டி” இந்திய தோல்விக்கான காரணம்..?
33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த மாதம் ஜூலை 26ம் தேதி இரவு தொடங்கியது.. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். .
தொடங்கிய நாளில் இருந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று கலப்பு இரட்டையர் வில்வித்தை அரை இறுதி போட்டியில் இந்தியாவின் சார்பில் அங்கிதா பகத் – தீரஜ் பொம்மதேவரா இணைந்து தென் கொரியாவின் லிம் சி-ஹியோன் – கிம் வூ-ஜின் எதிராக விளையாடினர்..
விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணிக்கு 6-க்கு 2 என்ற புள்ளிகள் என்ற வித்தியாசத்தில் படும் தோல்வியை சந்தித்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டுள்ளது..
பின்னர், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் அமெரிக்க அணியின் பிராடி எலிசன் – கேசி காஃப்ஹோல்ட் ஜோடிக்கு எதிராக அங்கிதா பகத் – தீரஜ் பொம்மதேவரா இணைந்து விளையாடி அந்த வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணியின்
முதல் செட்டில் 3 8-37,
2வது செட்டில் 37-35,
3வது செட்டில் 34-38,
4வது செட்டில் 37-35 பெற்று 6 – 2 என்ற கணக்கில் விளையாடி தோல்வி அடைந்துள்ளனர்..