பார்க்க மறந்த சில முக்கிய செய்தியை ஜஸ்ட் ஒரு க்ளிக்ல படிங்க..!!
1. காவிரி ஆணைய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு முடிவு.. சட்ட வல்லுநர்களுடனான ஆலோசனைக்கு பிறகு கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு..
2. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்குக் ஒப்புதல்.. திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து மசோதா சட்டமாக மாற்றம்.
3. மகளிர் இட ஒதுக்கீடு சட்டமாக மாறினாலும் அமலுக்கு வர பல ஆண்டுகள் ஆகும்.. தேர்தல் நாடகத்திற்காக மசோதா நிறைவேற்ற பட்டிருப்பதாக ப.சிதம்பரம் விமர்சனம்..
4. டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக தடுப்பு முகாம் நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவு.. எடப்பாடி பழனிசாமி தனது இருப்பை காட்டிக்கொள்ளவே குறை கூறி வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி..
5. வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு.. தொடர் விடுமுறை காரணமாக காலக்கெடு நீட்டிக்கப்படாது என ஆர்பிஐ திட்டவட்டம்..
Discussion about this post