“கூடவே இருந்து கஷ்டபடுத்துவதை விட.. விலகி இருந்து சந்தோஷப்படுத்தலாம்..”
பார்த்திபன்:
தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் முதன் முதலில் அவர் இயக்கி நடித்த திரைப்படம் புதிய பாதை. அதன்பின் உள்ளே வெளியே, குடைக்குள் மழை ஒத்த செருப்பு, போன்ற பல வெற்றி படங்ளை இயக்கி நடித்துள்ளார். மாறுப்பட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
தற்போது இவர் இயக்கி நடித்திருக்கும் டீன்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
பார்த்திபன்- சீத்தா:
புதிய பாதை திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை சீதாவை 1990ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2001ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது வரையிலும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன், டீன்ஸ் படத்தின் புரமோஷன் தொடர்பாக பேசிய போது தனது திருமணம் வாழ்க்கை குறித்தும் பேசியுள்ளார்.
பார்த்திபன் கூறியதாவது:
நானும் சீத்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே தனக்கு திருமண வாழ்க்கை செட் ஆகவில்லை என்பதை உணர்ந்துக் கொண்ட நிலையிலும், விவாகரத்து செய்து பிரிய 12 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது முட்டாள்த்தனம் என உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.
மேலும் காதலித்து திருமணம் செய்துக் கொள்பவர்களும், தலையில் மனைவியை தூக்கி வைத்துக் கொண்டாடியவர்களும் விவாகரத்து செய்து பிரிந்துவிடுகிறார்கள். எல்லாரும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி இருக்க முடியாது. ஆரம்பத்தில் விவாகரத்து எல்லாம் தப்பான விஷயம் என நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால், ஒரு கட்டத்தில் மனசுக்கு பிடிக்காமல் போய் விட்டால் சகித்துக் கொண்டு வாழ்ந்து அவர்களை கஷ்டப்படுத்துவதை விட பிரிந்து அவர்களை சந்தோஷமாக வைத்து விட்டு நாமும் சந்தோஷமாக இருக்கலாம் என்பதை புரிந்துக் கொண்டேன் என்றார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-பவானி கார்த்திக்