ரத்தான இந்தியா – பாகிஸ்தான் போட்டி..! யார் வெற்றி தெரியுமா..?
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.. முதல் அணியாக சூப்பர் 4 (FOUR) சுற்றுக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியுள்ளது.
ஆசிய கிரிக்கெட் போட்டிக்கு உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி இலங்கையின் பல்லேகலேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.
ரோகித் ஷர்மா 11 ரன்களிலும், விராட் கோலி 4 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 14 ரன்களிலும், சுப்மன் கில் 10 ரன்களிலும் ஆட்டத்தை முடித்தனர். இந்திய அணி 66 ரன்களில் 4 முக்கிய விக்கெட்களை இழந்த நிலையில், 5ஆவது விக்கெட்டிற்கு இளம் வீரர் இசான் கிஷனும், ஹர்திக் பாண்டியாவும் மீண்டும் ஆட்டத்தை சூடு பிடிக்க வைத்தனர்.
இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து நான்காவது அரைசதம் அடித்தார். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் அரைசதம் அடித்து அசத்தினார். இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 138 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இசான் கிஷன் 82 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 87 ரன்களும் எடுத்து அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தனர்.
இறுதியில் இந்திய அணி 48 புள்ளி 5 ஓவர்களில் 266 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்ததுள்ளது.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், இந்திய அணியின் 10 விக்கெட்களையும் வீழ்த்தினர். பின் 267 ரன்கள் இலக்கு என்ற விகிதத்தில் பாகிஸ்தான் அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, தொடர்மழையால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு, இரண்டு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதில் யார் வெற்றியாளர் என்பதை அடுத்த மேட்சில் தான் பார்க்க முடியும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..