காவிரியை நம்பி ஏமார்ந்த விவசாய மக்கள்..!! வேதனை நிறைந்த வார்த்தைகள்..!!
நாகப்பட்டினம் மாவட்டம் ஆதமங்கலம் கிராமத்தில் காவிரி நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்டுள்ள குருவை பயிர்கள் தண்ணீர் இல்லாத காரணத்தால் கருகிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் இருந்து குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட போதிலும் கடைமடை பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்று வட்டார கிரமங்களுக்கு தண்ணீர் கிடைக்காத காரணத்தால் பயிர்கள் நாசமாக போவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் வருகையின் போது திறந்து விடப்பட்ட தண்ணீர் மீண்டும் நிறுத்திவிடப்பட்டு இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து விவசாயம் செய்துள்ள பயிர்கள் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாததால் வாடி விட்டதாகவும் அதற்கு இழப்பீடு தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post