“ரத்தன் டாடா உயில்..” சமையல் காரர், வளர்ப்பு நாய் பெயரில் சொத்து..!!
மறைந்த பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா தன்னுடைய சொத்துக்களை சமையல்காரர், பணியாளர்கள் மற்றும், வளர்ப்பு நாய் பெயரில் எழுதி வைத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல தொழில் அதிபரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா (வயது 86) உடல்நலக்குறைவின் காரணமாக காலமானார். ரத்தன் டாடா வாழும் பொழுதே தன்னுடைய நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு பல உதவிகளை செய்தவர்., கொரோனா காலத்தில் கூட 550கோடியை நன்கொடையாக கொடுத்தவர் ரத்தன் டாடா..
தன் வாழ்நாளில் திருமணமே செய்துக்கொள்ளாத ரத்தன் டாடா தன்னுடைய சொத்துக்கள் யார் யாருக்கு கிடைக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்துள்ளார். அது பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது..
உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளவை
* ரத்தன் டாடாவின் அறக்கட்டளைகளுக்கு 10,000 கோடிக்கு மேலான சொத்துக்களை கொடுத்துள்ளார்
* அவருடைய கடைசி காலத்தில் மிகவும் உதவியாக இருந்த உதவியாளர் சாந்தனு நாயுடு, அவரது சகோதரர் ஜிம்மி டாடா, மற்றும் சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா ஆகியோருக்கும் சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்..
* அதேபோல் ரத்தன் டாடாவிடம் பல ஆண்டுகளாக உதவியாளராக வேலை பார்த்து வந்த ராஜன் ஷா விற்கு தன்னுடைய சொத்துக்களில் 3பங்கை எழுதி வைத்துள்ளார்..
* மற்றும் அவரின் செல்ல வளர்ப்பு நாயான டிட்டோவை கவனித்துக் கொள்வதற்காக ஆகும் செலவுகளை அதன் பெயரில் சொத்தாக எழுதி வைத்துள்ளார்…
* தன்னிடம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமையல்காரராக இருக்கும் சுப்பையாவுக்கும் சொத்துக்களை டாடா எழுதி வைத்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது…