டாக்டர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையிலே சில வருடங்களாகவே மோதல்கள் இருந்தன. இது பொதுக்குழு கூட்டத்திலும் எதிரொலித்தது. இந்த நிவைலையில், ஏப்ரல் 10ஆம் தேதி காலையும் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, அன்புமணி ராமதாஸை தலைவர் பதவியில் இருந்து நீக்கி அறிவித்தார். தன்னை தலைவர் பதவியில் இருந்து நீக்கி செயல் தலைவராக நியமிப்பார் என அன்புமணி உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லை. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்த அன்புமணியை ராமதாஸின் பிரஸ்மீட் அதிர வைத்தது.“
உடனடியாக பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அன்புமணியை நேரடியாக சந்திக்க சென்றனர். அப்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்ட விதிகளின்படி தலைவருக்கு தான் அதிகாரம் உண்டு. ஆனால் அந்த தலைவர் பதவியை மாற்றுவதற்கு நிர்வாக குழு, பொதுக்குழு கூடிதான் முடிவெடுக்க வேண்டும். இப்படி ஒரு முடிவை அறிவிப்பது கட்சிக்கு நல்லதல்ல, விதிப்படி சரியும் அல்ல. கட்சியின் எதிர்காலம்தான் இனி முக்கியம். பாமகவின் பொதுக்குழு கூட்டத்தை நீங்க கூட்டுவதாக அறிவியுங்கள்’ என்று கூறியுள்ளனர். ஆனால், அன்புமணியோ இப்போது எதுவும் வேண்டாம் அமைதியாக இருங்கள் என்று அவர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.
ராமதாஸ் பிடிவாதக்கார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு தெரியும். இது அன்புமணிக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், தந்தை என்பதால் அவர் தன்னை எதுவும் செய்ய மாட்டார் என்று தப்புக்கணக்கு போட்டு விட்டார். கடந்த ஏப்ரல் 11ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.
இது குறித்து, தந்தையிடம் 9ம் தேதி அன்புமணி செல்போனில் பேசியிருக்கிறார். அப்போது, பாரதிய ஜனதாவுடன் உறவு வேண்டாமென்று கடந்த பொதுக்குழுக் கூட்டத்திலேயே மறைமுகமாக சொன்னேன். இப்போது, அமித்ஷாவை சென்று சந்திக்க வேண்டாமென்று ராமதாஸ் கூறியிருக்கிறார். ஆனால், அன்புமணி தந்தை சொல் கேட்க மறுத்துள்ளார். கடைசியில், கட்சியின் தலைவர் பதவியை தந்தையிடம் இழந்து விட்டார் அன்புமணி.