அதிமுக குறித்த பாமக தலைவரின் விமர்சனத்திற்கு, அன்புமணி நடந்ததை நினைத்து பார்கணும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக கூறியுள்ளார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக 4 பிரிவுகளாக உள்ளது என அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு பதிலளித்தார். ஒரு பக்கம் வருத்தமும், வேதனை உள்ளது. மறுபக்கம் பாமக தலைவர் அன்புமணியின் பேச்சு கண்டனத்திற்குரியது என்றார்.
தேர்தல் ஆணையத்தின் கடிதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை. அந்த பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று தெரிவித்தார்.
ஒபிஎஸ் குருப் வெங்காயம், உரிக்க உரிக்க ஒன்றுமில்லை என கூறினார். மேலும் அம்பேத்கர் சிலை சேதத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார், தலைவர்கள் சிலையை சேதப்படுத்துவது ஈனத்தனமான செயல் என விமர்சித்தார்.