திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் அஜய்குமார் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் கிரிக்கெட் விளையாடுவதில் முன்விரோதம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜய்குமார் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த சிலர் அஜய்குமாரை சரமாரியாக அரிவாளாள் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். படுகாயம் அடந்து, இரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்த அஜய்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.