அண்ணாமலை தலைமையில் தமிழ்நாடு பாஜக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவரது தலைமையின் கீழ் தன்னால் செயல்பட முடியாது என்றும் அதனால் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் கட்சியின் விதிமுறைகளை மீறியதாக நடிகை மற்றும் பாஜக கட்சியிலிருந்த காயத்ரி ரகுராமனை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் கட்சியின் கொள்கைக்கு மாறாக செயல்படும் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்டும் என்று அறிவித்தார். இந்நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் தற்போது பாஜக கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில், உண்மையான தொண்டர்களுக்கு பாஜகவில் மதிப்பு இல்லை அண்ணாமலைக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் அங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது இதனால் பாஜக கட்சியில் இருந்து விளங்குவதாகவும் அண்ணாமலை தலைமைக்கு கீழ் தன்னால் செயல்பட முடியாது என்றும் கூறினார், மேலும் அவர் பேசுகையில் அண்ணாமலை பொய் பேசும் அதர்மத்தின் நிற்கும் தலைவர் என்றும் மேலும், பெண்கள் மரியாதை இல்லாத இடத்தில் தொடர்ந்து இருக்க கூடாது தன்னிடம் இருக்கும் வீடியோ ஆடியோக்களை போலீசிடம் சமர்ப்பித்து அண்ணமலையை விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.
Discussion about this post