பிறந்தநாள் கொண்டாட விருப்பம் இல்லை..! இளையராஜா சொன்னது ஏன்..?
இளையராஜா:
அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு கால் பதித்த இளையராஜா இன்று வரையிலும் முன்னனி மற்றும் தற்போதைய இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.
தமிழ் திரையிசையில் இளையராஜாவின் பங்கு மிக பெரியது. அவர் வந்து இசையமைத்த பிறகு தான் பாமரனும் வாயை திறந்தான் பாட்டு பாடுவதற்கு.
அன்னக்கிளியில் அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தது. இசைஞானி என்று ரசிகர்களால் போற்றப்படும் இளையராஜா சுமார் 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார்.
எம்.எஸ் விஷ்வநாதனக்கு பிறகு இளையராஜா:
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிறகு தமிழ் திரையிசையின் முகத்தை பெரிதாக மாற்றிக்காட்டியவர் இளையராஜா மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பாடலே ஹிட்:
இளையராஜா முதன்முதலாக அன்னக்கிளியில் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி பட்டி தொட்டி எங்கும் ஔிக்க தொடங்கியது.
இன்பம் துன்பம் இரண்டிலும் கலந்த இசையானி:
ரசிகர்கர்கள் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இளையராஜா மக்கள் சோகத்தில் இருந்தாலும் இளையராஜா பாடல்கள் தான் சந்தோஷம், காதல், தோல்வி, வெற்றி என எதுவாக இருந்தாலும் இளையராஜா பாடல்கள் தான் முதன்மையாக இருக்கும்.
அந்த அளவிற்கு ரசிகர்களிடம் தனக்கென ஒரு கோட்டையை பிடித்துள்ளார். ஒரே நாளில் கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு இசையமைத்த வரலாறு எல்லாம் உண்டு. பாடல்கள் மட்டுமின்றி ரீ ரெக்கார்டிங்கும் அதில் சேரும்.
மூன்று தலைமுறையினரையும் கவர்ந்தவர்:
1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவரது இசைத்தான் நமது அப்பாக்கள் தலைமுறைக்கும் சரி, நமது தலைமுறைக்கும் சரி, நமது பிள்ளைகள் தலைமுறைக்கும் சரி ஏன் இப்போதைய 2கே கிட்ஸையும் இளையராஜா பெரும்பாலும் கவர்ந்துவிட்டார் என்பதுதான் எதார்த்தமான உண்மை.
வரலாற்றை படைத்த இளையராஜா:
கமல் ஹாசன் நடித்த வெளிவந்த காக்கிச்சட்டை படத்தின் கம்போசிங்கிற்காக இளையராஜா கொடைக்கானல் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு சில நாட்கள் அறை போட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இவரோ அங்கு போன முதல் நாளில் சில மணிநேரங்களிலேயே காக்கிச்சட்டை பாடல்களை போட்டு முடித்துவிட்டாராம்.பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த அவர் சரி சும்மா சில ட்யூன்களை போட்டு வைப்போம் என்று போட ஆரம்பித்து 30 நிமிடங்களில் அந்த ஆறு ட்யூன்களையும் போட்டு விட்டாராம்.
அது இளையராஜாவுக்கும் பிடித்துப்போல் இந்த மொத்த ட்யூன்களையும் ஒரே படத்துக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்துள்ளார்.
இதனையடுத்து சென்னை திரும்பிய அவரை பஞ்சு அருணாச்சலம் சந்தித்த போது அந்த ஆறு ட்யூன் விஷயத்தை அறிந்திருக்கிறார். உடனே அதை இளையராஜாவிடம் கேட்க அதற்கு அவரோ ஒரே படத்தில் வைத்தால் தருகிறேன் என்று கண்டிஷன் போட்டுள்ளார்.
பிறகு இந்த விஷயம் இயக்குநர் ஆர்.சுந்தரராஜனுக்கு பஞ்சு மூலமாக தெரிந்திருக்கிறது. உடனே ஒரு கதையை எழுதி அந்த ஆறு ட்யூன்களையும் வைத்திருக்கிறார் சுந்தரராஜன்.
அப்படி உருவான படம் தான் வைதேகி காத்திருந்தாள். பொதுவாக ஒரு கதைக்காக பாடல்கள் உருவாக்குவது தான் வழக்கம் ஆனால் பாடல்களுக்காக ஒரு கதை உருவானது வரலாறு.
இப்படி வரலாறு சாதனைகளை புரியும் இளையராஜாவுக்கு இன்றைய நாள் ஒரு முக்கியமான நாள் ஏனென்றால் இந்த வைரம் இந்த உலகிற்கு வந்த நாள்.
பிறந்த நாள் கொண்டாட விருப்பம் இல்லை:
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, “இந்த ஆண்டு என் பிறந்த நாளை நீங்கள்தான் கொண்டாடுகிறீர்கள். எனக்கு வாழ்த்துகள் சொல்கிறீர்கள்.
ஆனால், இந்த ஆண்டு பிறந்த நாள் எனக்கு சோகமாக அமைந்திருக்கிறது. நான் என் மகளை பறிகொடுத்தத காரணத்தால் எனக்கு இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டமெல்லாம் இல்லை. உங்களுக்காகத் தான் இந்த பிறந்த நாள் கொண்டாட்டமெல்லாம்” என்று கூறியிருக்கிறார்.
– பவானி கார்த்திக்.