பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு படத்தின் ப்ரோமோஷன்கள் நடைபெற்று வரும் நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு அலுவலகத்தில் தெலுகு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரண் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தை பார்த்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த ஆண்டு பொங்கலுக்கு தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களின் படங்களான துணிவு மற்றும் வாரிசுக்கு படங்கள் ஒரே நேரத்தி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இருவரின் படங்களும் வெளியாகுவதால் இந்த இப்படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக தெரிகிறது. துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் வாரிசு படத்தின் ட்ரைலருக்கு சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த சமயத்தில் தெலுங்கின் முன்னணி நடிகரான ராம் சரண் வாரிசு படத்தை பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராம் சரணின் அடுத்த படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ள நிலையில் ராம் சரண் வாரிசு படத்தை அவரது அலுவலகத்தில் பார்த்துள்ளார். இந்த படத்தை பார்த்த ராம் சரண் மிகவும் நெகிழிச்சிடைந்து படம் சிறப்பாக இருந்ததாக தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார் என்றும் வாரிசு படத்திற்கு வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.