நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் கடந்த ஏப்ரல் 23 ம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரிக்கு சென்றபோது சாவி காணாமல் போனதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக கடந்த மாதம் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஐஸ்வர்யா வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த ஈஸ்வரி என்பவர் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈஸ்வரியைக் கைது செய்த போலீசார், திருடிய நகைகளை வைத்து சோழிங்கநல்லூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீடு வாங்கியதையும், கணவருக்கு மளிகை கடை வைத்துக்கொடுத்ததையும் கண்டறிந்தனர். மேலும் அவரது வீட்டில் நடந்த சோதனையில் ஒரு கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணம் மற்றும் 20 சவரன் நகைகளை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதில் கடந்த ஏப்ரல் 23 ம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரிக்கு சென்றபோது சாவி காணாமல் போனதாக குறிப்பிட்டுள்ளார்
Discussion about this post