தெருவில் தேங்கிய மழைநீர்.. கால்வாய்களை கட்டி தர வேண்டுமென கோரிக்கை..!
வேலூர் மாவட்டம்,வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் உள்ளது இங்கு மரப்பட்டறைகள் மற்றும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மழையின் நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. மக்கள் சாலையில் நடக்க முடியாத அளவுக்கு மழைநீரானது தேங்கியுள்ளது.
மேலும் குப்பைகளும் அள்ளப்படாததால் துர் நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது அபாயத்திலும் இருசக்கர வாகன ஓட்டிகள் பயனிப்பதால் பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து பல முறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இவ்வழியாக செல்லும் மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
எனவே மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை அமைத்து கால்வாய்களை கட்டி தர வேண்டுமென மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
மாநகராட்சி நிர்வாகம் செவிடன் காதில் ஊதிய சங்கை போல் இல்லாமல் துரிதமாக செயல்பட்டு சாலையை அமைத்து கால்வாய்களையும் அமைத்து தர வேண்டுமென மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
-பவானி கார்த்திக்