வங்கக்கடலின் தென்மேற்கில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலின் தென்மேற்கில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழ்நாட்டின் கரையை நோக்கி 13 கி.மீ. வேகத்தில் நகரும்.இதன் காரணமாக, மார்ச் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா,மன்னார் வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலிலும் காற்றின் வேகம் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளர்கள். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.