“கொரோனா குமார்” படத்தில் சிம்புவுக்கு வில்லனான பிரபல நடிகர் பகத் பாசில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வளம் வருபவர் நடிகர் சிம்பு. சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து, கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்த காடு, கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் இயக்குநர் கோகுல் இயக்கும் ‘கொரோனா குமார்’ படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குநர் சங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் ஃபகத் பாசில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தமிழ் சினிமாவில் ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பகத் பாசில். தொடர்ந்து தற்போது கமல்ஹாசனுக்கு வில்லனாக ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதிஸ்டாலின் நடிக்கும் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.