நெல்சன் காட்டில் மழை.. இரண்டே நாளில் 124 கோடி வசூல் அள்ளிய ஜெயிலர்..!
தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜெயிலர் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. மொத்தம் 7000 ஆயிரம் திரை அரங்கில் வெளியாகியுள்ளது.
துபாயில் உள்ள ஐக்கிய அரபு அமீரக ரசிகர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் மேளம் சத்தம் முழங்க தியேட்டருக்கு சென்று கேக் வெட்டி.., கொண்டாடியுள்ளார். தமிழகத்தில் முதல் நாள் 24கோடி வசூல் அள்ளி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற மாநிலங்களான கேரளாவில் 6 கோடி, கர்நாடகாவில் 10 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 10 கோடி, வசூல் ஆகியுள்ளது. வெளிநாட்டில் இதை விட பல மடங்கு வசூல் அள்ளியுள்ளது.
ஜெயிலர் படம் வெளியான முதல் நாள் 72 கோடியும், இரண்டாம் நாள் 52 கோடியும் மொத்தம் 124 கோடி தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாதாரண நாளில் இவ்வளவு வசூல் அள்ளியுள்ள ஜெயிலர் இன்னும் விடுமுறை நாட்களில் முறிஅடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post