நாங்குநேரியில் இரவில் வீடு புகுந்து பட்டியலினத்து அண்ணன், தங்கையை வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவத்தில் மேலும் 3 மாணவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றொரு மாணவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஓய்வுப்பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளாதவது:
மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகளால் ஏற்படும் வன்முறையை தடுக்க நீதிபதி சந்துரு குழு வழிகாட்டுதல் வகுக்கும். கல்வியாளர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை பெற்று நீதிபதி சந்துரு குழு அறிக்கை அளிக்கும். இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவி இருப்பது எதிர்கால தமிழ்நாட்டு நலனுக்கு உகந்தது அல்ல. உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய முக்கிய பிரச்சனையில் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி சந்துரு குழு ஆலோசனை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post