வணிக நோக்கத்திற்காக ரயில் பயணிகளின் தகவல்களை தனியாருக்கு விற்பனை செய்யும் டெண்டரை திரும்பப் பெறுவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியன் ரயில்வே நிறுவனத்தின் ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணிகள் ரயில் முன்பதிவை பதிவு செய்துவருகின்றனர். இதில் பயணிகளின் பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை ரயில்வே பெற்று முன்பதிவை மேற்கொண்டுவந்துள்ளது.
இந்திலையில் அதனை இலாப நோக்கத்திற்காக இந்திய ரயில்வே நிறுவனம் தனியாருக்கு இந்த தகவல்களை அளிக்க டெண்டர் கோரியது. இந்த முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த திட்டம் மூலம் ரூ.1000 கோடி வரை வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் தலைமையிலான தகவல் தொழில்நுபத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் பதிலளித்துள்ள ரயில்வே, வணிக நோக்கங்களுக்காக பயணிகளின் தரவுகள் விற்பனை செயப்படுவதற்கான சென்டர் கோரப்படுவது திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்திய அரசின் பயனர் தணிப்பாதுகாப்பு 2018 சட்டத்தின்படி பணமாக்கல் நடவடிக்கைக்காக விடுக்கப்பட்ட டெண்டர் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.