ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற செப்.8 ஆம் தேதி சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதில் செப்.17-ஆம் தேதி அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் உள்ளூர் விடுமுறை நாளான செப்.8 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு கருவூலம் மற்றும் சார்நிலை கருவுலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாமல் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் க. அமிதா ஜோதி அறிவித்துள்ளார்.
இந்த அறிக்கை www.chennai.tn.nic.in என்ற இணையதள முகவரியில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.